தலைவியை தடைகோரி வழக்கு

விஜய் இயக்கி வரும் ‘தலைவி’ படத்திற்கு தடை விதிக்குமாறு தீபா வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஏ.எல் விஜய் தற்போது முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்து வருகிறார். ‘தலைவி’ என்ற பெயரில் உருவாகி வரும் இந்த படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் தற்போது ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா என்னுடைய அனுமதி இல்லாமல் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தை எப்படி எடுக்கலாம். என வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், “தலைவி’ படத்தை எடுக்க தடை விதிக்க வேண்டும். கௌதம் மேனன் இயக்கி வரும் ஜெயலலிதாவின் வாழ்க்கை சம்மந்தப்பட்ட வெப் சீரிஸ் தொடரையும் தடை விதிக்க வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.


No comments

Powered by Blogger.