இலங்கைப் பாடகர்கள் சங்கம் மைத்திரிக்கு பாராட்டு

கலைஞர்களுக்கு ஓய்வூதியத்தை பெற்றுக்கொடுத்து, அவர்களின் நலன்பேணலுக்காக கடந்த ஐந்து வருட காலப்பகுதியில் முன்னெடுத்த பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்களுக்காக இலங்கைப் பாடகர்கள் சங்கம் ஜனாதிபதிக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.

இலங்கைப் பாடகர்களின் சங்கம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு பாராட்டு தெரிவிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்திருந்த விசேட சந்திப்பொன்று  பிற்பகல் கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.

கடந்து ஐந்து வருட காலமாக ஜனாதிபதி முன்னெடுத்த நிகழ்ச்சித்திட்டங்கள் நாட்டின் கலைஞர்களுக்கு பெரும் சக்தியாக இருந்ததாக இதன்போது பாடகர்கள் தெரிவித்தனர். கலையுணர்வும் மனிதநேயமுமிக்க தலைவரான தற்போதைய ஜனாதிபதி கலைஞர்களுக்காக மேற்கொண்ட உன்னத பணிக்காக தமது நன்றியை அவர்கள் தெரிவித்தனர்.

ஜனாதிபதிக்கு பாராட்டு தெரிவித்து நினைவுச் சின்னமொன்றும் வழங்கி வைக்கப்பட்டது.

இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, அனைத்து மக்களும் சமாதானமாகவும் ஐக்கியமாகவும் சகோதரத்துவத்துடனும் வாழக்கூடிய மனித நேயமிக்க தேசமொன்றை கட்டியெழுப்புவதற்கு கலையை நேசிக்கக்கூடிய ஒரு சமூகத்தினாலே முடியும் எனத் தெரிவித்தார்.

சுமார் 52 வருட தனது அரசியல் வாழ்க்கையிலும் தனது வாழ்நாளிலும் அதிகம் மகிழ்ச்சியடையக்கூடிய விடயம் எதிர்கால தலைமுறையை போதைப்பொருளிலிருந்து விடுவிப்பதற்கு தான் முன்னெடுத்த நிகழ்ச்சித்திட்டங்களாகும் என நினைவுகூர்ந்த ஜனாதிபதி, எதிர்காலத்தில் அதனை வெற்றிபெறச் செய்வதற்கு கலைஞர்கள் என்ற வகையில் அனைவருக்கும் விரிவான பணிகளை மேற்கொள்ள முடியும் எனத் தெரிவித்தார். அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பாடுமாறும் ஜனாதிபதி கலைஞர்களிடம் கேட்டுக்கொண்டார்.

இலங்கைப் பாடகர்கள் சங்கத்தின் தலைவர் ஜானக விக்ரமசிங்ஹ உள்ளிட்ட முன்னணி பாடகர்கள் பலரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.No comments

Powered by Blogger.