மொட்டும் கையும் இணைந்ததால் பெரும் வெற்றி - மகிந்த

சிறிலங்கா பொதுஜன முன்னணியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்ததன் மூலம் கோத்தபாய ராஜபக்ச நிச்சயம்  வெற்றி  பெறுவார்-இவ்வாறு தெரிவித்துள்ளார்.எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கோகாலை தொகுதி ஆதரவாளர்களுடன் இடம்பெற்ற விசேட சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது,

சிறிலங்கா சுதந்திரக் கட்சி எனது கட்சியுடன் இணைந்ததன் ஊடாக ஒரு விசேட முன்னணியுடன் பயணிக்க முடிந்துள்ளது.

நாங்கள் இரட்டை சகோதரர்களை போன்றவர்கள் கடந்த தேர்தலில் ஆட்சி அமைத்து எதிர்க் கட்சித் தலைவர் பதவியை ஜனாதிபதி எனக்கு வழங்கினார்.

எதிர்க் கட்சியில் இருந்துகொண்டு நாம் கட்சி ஒன்றை உருவாக்கினோம். பிரதேச சபை தேர்தல்களில் 71 சதவீத வெற்றியை பெற்றுக் கொண்டோம்.

சிறிலங்கா பொதுஜன முன்னணியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் வெவ்வேறாக எல்பிட்டிய தேர்தலை சந்தித்தது. அதனால் கிடைத்த வாக்குகளை ஒன்றிணைத்து பார்த்தால் அது 70 சதவீதமான வாக்குகளாகும்.

அப்படியானால் சிறிலங்கா சுதந்திரக் கட்சியையும், சிறிலங்கா பொதுஜன முன்னணியையும் இணைந்துள்ளதன் மூலம் அதிவிசேட வெற்றியை ஈட்டிக்கொள்ள முடியும்-என்றார்.


No comments

Powered by Blogger.