வவுனியாவில் தீவிரமடையும் போராட்டம்

கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், மின்சாரத்தை உடனடியாக வழங்க வேண்டும் எனத் தெரிவித்து தொடருந்தை மறித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் தொடருந்து ஒன்றை நேற்று முற்றுகையிட்ட மக்கள், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வவுனியாவில் - ஆச்சிபுரம் பகுதிக்கு நேற்று மாலை தொழில் நிமித்தம் சென்ற மின்சாரசபை ஊழியர்கள் மீது அங்கிருந்த  குழுவினரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாக்குதலில் ஆறு மின்சாரசபை ஊழியர்கள் படுகாயடைந்த நிலையில், வவுனியா பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனையடுத்து, குறித்த தாக்குதல் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா மின்சாரசபை ஊழியர்கள் நேற்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், வவுனியாவில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால், அதிருப்பதி அடைந்துள்ள மக்கள்  ஏ9 வீதியை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் தொடருந்தை  முற்றுகையிட்டு போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


No comments

Powered by Blogger.