கரடிகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை

பற்றைப் பகுதிகள் தீப்பற்றியதில் காயங்களுடன் உயிர்தப்பிய கோலா கரடிகளுக்கு, மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆஸ்திரேலியா வனப்பகுதிக்கு பரவிய புதர் தீயில், காயங்களுடன் உயிர்தப்பிய கோலா கரடிகளுக்கே, இவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் கடந்த மாதம் மின்னல் தாக்கி பற்றைகள் தீப்பற்றி எரிந்தன.

காற்றின் வேகத்தில் தீ வனப் பகுதிக்கும் பரவியதால், லேக் இன்ஸ் விலங்கியல் பூங்காவில் பராமரிக்கப்பட்ட சுமார் 350 கோலா கரடிகள் உயிரிழந்தன.

ஆஸ்திரேலியாவை பிறப்பிடமாகக் கொண்ட இந்த கோலா கரடிகள் பல உயிரிழந்ததையடுத்து, காயங்களுடன் இருந்த விலங்குகளை மீட்டு விலங்கியல் நல மருத்துவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தீ அணைக்கப்பட்டாலும், வனப்பகுதியில் இயல்பு நிலை திரும்பிய பின்னர் கோலா கரடிகளை வனப்பகுதியில் விட திட்டமிடப்பட்டுள்ளது.


No comments

Powered by Blogger.