இதற்குத்தான் அரசாங்கம் - கோத்தபாய

தேர்தல் வெற்றியின் முதலாவதாக பொதுமக்களின் பாதுகாப்பையே உறுதிப்படுத்தவுள்ளோம். நாங்கள் நிறுவும் அரசு பொதுமக்களின் பாதுகாப்புக்கே முன்னுரிமை அளிக்கும் - இவ்வாறு ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தேர்தல் பரப்புரை நிகழ்வில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.  அவர் தெரிவித்ததாவது,

மூன்று தசாப்த காலமாக நிலவிய யுத்தத்தை நிறைவு செய்ய எங்களால் முடிந்தது. அந்த யுத்தத்தை நிறைவு செய்து வேகமான அபிவிருத்தியை முன்னெடுத்தோம்.

கடந்த தேசிய பாதுகாப்புக்கோ, பொதுமக்களின் பாதுகாப்புக்கோ எத்தகைய முனைப்பான நடவடிக்கைகளையும் கடந்த அரசு மேற்கொள்ளவில்லை.

அது தொடர்பான போதிய தெளிவும் புரிந்துணர்வையும் அவர்கள் கொண்டிருக்கவில்லை.  அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு அடிபணிந்து அவர்களின் நிபந்தனைகளை நிறைவேற்றிய அரசால் இந்த மக்களைப் பாதுகாக்க முடியாமல் போனது.

தேர்தல் வெற்றியின் முதலாவதாக பொதுமக்களின் பாதுகாப்பையே உறுதிப்படுத்தவுள்ளோம். நாங்கள் நிறுவும் அரசு பொதுமக்களின் பாதுகாப்புக்கே முன்னுரிமை அளிக்கும்.

எதுவித பயங்கரவாதத்தையும் தலைதூக்க இடமளிக்கப்போவதில்லை என நான் உறுதியளிக்கின்றேன். பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப, பாதுகாப்பை உறுதிப்படுத்த தெளிவான வேலைத்திட்டம் ஒன்றை நாங்கள் முன்வைத்துள்ளோம்.

என்மீது நம்பிக்கை வையுங்கள். எனக்கு வழங்கப்பட்ட பொறுப்புக்களை செவ்வனே நிறைவேற்றியவன் நான். எதிர்காலத்தில் பொதுமக்களால் எனக்கு வழங்கப்படும் பொறுப்புக்களை முழுமையாக நிறைவேற்றுவேன்-என்றார்.No comments

Powered by Blogger.