சூத்திரதாரிகள் சரணடைவு ; முடிவுற்றது போராட்டம்

மின்சார சபை ஊழியர்களின் போராட்டம் முடிவுற்றது முக்கிய சூத்திரதாரிகள் நீதிமன்றில் சரணடைவு 

வவுனியாவில் மின்சாரசபை ஊழியர்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தின் முக்கிய சூத்திரதாரிகள் எனச் சந்தேகிக்கப்படும் மூவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.

இதனையடுத்து,  நான்கு தினங்களாக மின்சார சபை ஊழியர்களினால் மேற்கொள்ளப்பட்ட பணிப்புறக்கணிப்புப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

ஆச்சிபுரம் பகுதியில் கடமைக்குச் சென்ற மின்சார சபை ஊழியர்கள் மீது அப்பகுதியிலுள்ள  குழுவினர் தாக்குதல் மேற்கொண்டிருந்தனர்.

இச் சம்பவங்களைக் கண்டித்தும்ஈ தாக்குதல் மேற்கொண்ட நபர்களை கைது செய்துசட்டத்தின் முன் நிறுத்துமாறு கோரியும் மின்சார சபை ஊழியர்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்து வந்தனர்.

இந்த நிலையில் இன்று தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ள முக்கிய சூத்திரதாரி என்று மின்சார சபை ஊழியர்களினால் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்ட நபர் உட்பட மூவர் நீதிமன்றில் தமது சட்டத்தரணிகளுடன் சரணடைந்துள்ளனர். 

இதையடுத்து சந்தேகநபர்களை எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு   நீதவான் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இதேவேளை நேற்று முன்தினம் பொலிஸார் முன்னெடுத்த தேடுதலில், ஏழுக்கு மேற்பட்டவர்கள் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.