இந்து பௌத்த ஒற்றுமைக்காகவே வந்தேன் - அத்துரலிய தேரர்

இந்து பௌத்த மக்களின் ஒற்றுமைக்காக நான் இங்கு வந்துள்ளேன். அதற்காகவே நான் செயற்பட்டு வருகின்றேன்-இவ்வாறு தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர். 

யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது,

நான் கடந்த இரு நாட்களாக கிளிநொச்சி, முல்லைத்தீவில் வாழும் தமிழ் மக்களை சந்தித்து கலந்துரையாடினேன். அவர்களின் நிலைமைகள் குறித்தும் ஆராய்ந்தேன். 

இதன்போது அங்கு வாழும் மக்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்வதாகக் கூறினர். விவசாயிகள் பெரும் பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.மக்களுக்கான வீடுகள் இல்லாமல் இருக்கிறார்கள்.

இவ்வாறான நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் பிரச்சனைகள் குறித்து கரிசனை காட்டாது, நாடாளுமனறத்தில் இனவாதத்தைப் பேசுகின்றனர்.

தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையிலான உறவிற்கு பாதகத்தை ஏற்படுத்தி வருகின்றனர். நாடாளுமன்றத்தில் உள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் அரசுடன் இணைந்து அழுத்தம் கொடுத்து முஸ்லிம் மக்கள் சார்பாக செயற்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்க்க அரசுக்கு அழுத்தம் கொடுக்காது இனவாதத்தை மட்டும் பேசி வருகின்றனர்.

அங்குள்ள மக்கள் முஸ்லிம் அடிப்படைவாதிகளினால் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். இதேவேளை அமெரிக்க இராணுவம் கிழக்கில் தளம் அமைக்க முயற்சிப்பது தொடர்பிலும் எதுவும் பேசவில்லை.

வெளிநாட்டு சக்திகளுக்கு இவர்கள் செயற்பட்டு வருகின்றனர். சஜித்துடன் முஸ்லிம் அடிப்படைவாதிகளே உள்ளனர். இவ்வாறான நிலையில் தமிழ், சிங்கள உறவை ஏற்படுத்த முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்சவுக்கு தமிழ் மக்கள் ஆதரவளிக்க வேண்டும். இதற்காகவே நாம் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம்.-என்றார்.No comments

Powered by Blogger.