மர்ம முறையில் சடலங்கள் மீட்பு

இங்கிலாந்தின் எஸ்ஸெக்ஸ் பிராந்தியம் கிரேஸில் உள்ள தொழிற்சாலைப் பகுதியில் ஒரு கொள்கலனில் 39 பேர் உயிரிழந்தநிலையில் அவர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.

இதனைதொடர்ந்து வியட்நாம் அதிகாரிகளினால் இதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 31 ஆண்கள் மற்றும் எட்டு பெண்கள் அடங்குகின்றனர். குறித்த 39 பேரும் வியட்நாம் பிரஜைகள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் இறந்தவர்கள் அடையாளம் காணப்படுவது இந்த சம்பவம் தொடர்பான விசாரணையில் ஒரு முக்கியமான படியாகும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளைஇ குறித்த சம்பவம் தொடர்பாக 15 இற்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன். அவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.