யாழ்.பல்கலை மாணவர் மாயம் ; பொலிஸார் தேடுதல்

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒருவர் காணாமல்போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா - கனகராயன்குளம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட குறிசுட்டகுளம் பகுதி  இளைஞர் ஒருவரே இவ்வாறு காணாமல்போயுள்ளதாக கூறப்படுகிறது.

நேற்றுக் காலை குறிசுட்ட குளம் பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டிலிருந்து தடி வெட்டுவதற்காக காட்டுப்பகுதிக்கு சென்ற குறித்த மாணவன் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

இதனையடுத்து, அவரது பெற்றோர்களால் கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இளைஞர் சென்றதாகக் கூறப்பட்ட காட்டுப் பகுதியில் இளைஞர்கள் மற்றும் பொலிஸார் தீவிர தேடுதல் நடத்தியிருந்த நிலையில் நேற்று  எவ்வித தகவலும் தெரியவில்லை எனக் கூறப்படுகிறது.

No comments

Powered by Blogger.