விலை குறைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்

விவோ நிறுவனத்தின் விவோ வை91 மற்றும் வை91ஐ ஸ்மார்ட்போன்களின் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் விவோ வை91 மற்றும் வை91ஐ ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்த ஆண்டு துவக்கத்தில் ரூ. 10,990 மற்றும் ரூ. 7,990 விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.  

மே மாதத்தில் இவற்றின் விலை குறைக்கப்பட்டது. இந்நிலையில், இரு ஸ்மார்ட்போன்களின் விலை மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது.

விவை வை91 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 8,490க்கும், விவோ வை91ஐ 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 6,990 விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. 

இது முந்திய விலையை விட ரூ. 500 குறைவு ஆகும். ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் தளங்களில் இவற்றின் விலை விரைவில் மாற்றப்படும் என்றும் ஆப்லைனிலும் இந்த விலையிலேயே விற்பனை செய்யப்படும். என குறிப்பிடப்படுகிறது.

No comments

Powered by Blogger.