மின்சாரம் துண்டிப்பு மக்கள் பாதிப்பு

வவுனியா மின்சாரசபை ஊழியர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து வவுனியாவில் 40ற்கு மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளமையால் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் வவுனியா ஆச்சிபுரம், சமளங்குளம், சிதம்பரபுரம், சாளம்பைக்குளம், பட்டானிச்சூர், போன்ற பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தமது கிராமங்களில் துண்டிக்கப்பட்ட மின்சார இணைப்பை ஏற்படுத்தி தருமாறு கோரி வவுனியா மின்சாரசபைக்கு முன் கூடியிருந்தனர்.

மின்சாரசபையின் வாயிலில் கடமையில் இருந்த பொலிசாரும், வாயிற்காவலரும் மக்களை மின்சாரபைக்குள் அனுமதிக்கவில்லை.

இந்நிலையில் மக்கள் தமக்கு மின்சார இணைப்பு வழங்கவேண்டும். என்று வவுனியா பொலிசாரிடம் முறைப்பாடு செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.


No comments

Powered by Blogger.