பன்னீர்செல்வத்துக்கு தங்கத் தமிழ் மகன் விருது

தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமெரிக்காவில் தங்கத் தமிழ் மகன் விருது வழங்கப்பட்டது.

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் சிகாகோ சென்றிருந்தார்.

அங்குள்ள ஓக் புரூக் டெரேசில் நடைபெற்ற 10 ஆவது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு சிறப்பாக முடிவுற்றமைக்கான பாராட்டு விழாவில் அவர் கலந்துகொண்டார்.

இதன்போதே, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தங்க தமிழ் மகன் விருது வழங்கப்பட்டது.

 நிகழ்வில், ராஜா கிரு‌‌ஷ்ண மூர்த்தி, சேம்பர்க் மேயர் டாம் டெய்லி, ஓக் புரூக் மேயர் கோபால் ஆல் மலானி, தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத் குமார், தமிழ்நாடு வீட்டு வசதி துறை அரசு செயலர் ச.கிரு‌‌ஷ்ணன், உலக தமிழ் இளைஞர் பேரவை தலைவர் மருத்துவர் விஜய் பிரபாகர் உள்பட தமிழ் அமைப்புகளின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.


No comments

Powered by Blogger.