துண்டுபிரசுரங்களை பகிர்ந்த இருவருக்கு விளக்கமறியல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்டபாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிராக  துண்டுபிரசுரங்களை விநியோகித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கோட்டாபய ராஜபக்ஷ குறித்து அவதூறான கருத்துக்கள் அடங்கிய 58 துண்டு பிரசுரங்களை விநியோகித்ததற்காக அமைச்சர் ஹர்ஷ டி சில்வாவின் செயலாளர் உள்ளிட்ட இருவரும் நேற்று மிரிஹானவில் கைது செய்யப்பட்டிருந்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை நவம்பர் 14 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நுகேகொட நீதவான் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் துண்டு பிரசுரங்களை விநியோகிப்பதில் ஈடுபட்ட ஒரு சந்தேக நபர் தற்போது சிகிச்சை பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட இருவரும் நுகேகொட பகுதியைச் சேர்ந்த 60 மற்றும் 64 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.