யூடியூப்பின் புதிய விதி முறை

யூடியூப் சேவை தனது விதி முறைகளில் மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வரவிருக்கும் புதிய விதி முறைகள் குறித்து பயனாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

யூடியூப்பை பயன்படுத்தும் போது யூடியூப் பக்கதின் மேற்புறத்தில் பேனர் ஒன்றில் ஒரு பயனராக உங்களுக்கு என்ன விதி முறைகளில் மாற்றங்கள் ஏற்படப்போகின்றதென சரியான விவரங்களை அவதானிக்கக்கூடியதாக இருக்கும்.

நீங்கள் சேவையை எவ்வாறு பயன்படுத்தலாம், வெளியிடப்பட்ட உள்ளடக்கம், நீங்கள் வெளியிடும் உள்ளடக்கத்திற்கு நீங்கள் வழங்கக்கூடிய உரிமைகள் மற்றும் யூடியூப்  இன் உள்ளடக்கத்தை அகற்றுவதற்கான வழிகாட்டுதல்கள் ஆகியவை இதில் அடங்கும்.

மற்றவர்களின் பயன்பாட்டுக்கு பொருந்தாத உள்ளடக்கத்தை கண்காணிக்கவும் அதனைத் தடைசெய்யவும் YouTube க்கு உரிமை உண்டு.

“நீங்கள் சேவையில் சமர்ப்பிக்கும் உள்ளடக்கத்திற்கு நீங்களே சட்டப்படி பொறுப்பும் உரிமையும் ஆகும். ஸ்பேம் (spam) மற்றும் தீம்பொருள் (Malware) உள்ளிட்ட மீறல் மற்றும் துஷ்பிரயோகங்களைக் கண்டறிய உதவும் வகையில் உங்கள் உள்ளடக்கத்தை பகுப்பாய்வு செய்யும் தானியங்கி அமைப்புகளை நாங்கள் பயன்படுத்தலாம், ”என்று யூடியூப் தெரிவித்துள்ளது.

மேலும்,  யூடியூப் உடனான உங்கள் உறவு,   விதிமுறைகளை ஏற்றுக்கொள்வது,   விதிமுறைகளில் மாற்றங்கள்,   யூடியூப் கணக்குகள்  பயன்பாட்டில் பொதுவான கட்டுப்பாடுகள்,  பதிப்புரிமை கொள்கை,  உள்ளடக்கம்,   உரிமங்களுக்கான உங்கள்  உரிமை, இணையதளத்தில் யூடியூப் உள்ளடக்கம்  ,  YouTube இலிருந்து இணைப்புகள்,  YouTube உடனான உங்கள் உறவை முடித்தல்  உத்தரவாதங்களை விலக்குதல்,  பொறுப்பின் வரம்பு  பொது சட்ட விதிமுறைகள்,  போன்ற சேவை விதிமுறைகள் காணப்படுகின்றன.

No comments

Powered by Blogger.