துடுப்பாட்ட ஆலோசகராக ஹஷிம் அம்லா

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான ஹஷிம் அம்லா, கேப் டவுன் பிளிட்ஸ் அணிக்கு துடுப்பாட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த உலகக்கிண்ண தொடரின் பின்னர், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுப் பெற்ற ஹஷிம் அம்லா, வெளிநாட்டு ரி-20 கிரிக்கெட் லீக் தொடர்களில் மட்டும் விளையாட விருப்பம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது, தென்னாபிரிக்காவில் நடைபெறும் எம்.எஸ்.எல் ரி-20 தொடரில் விளையாடும் கேப் டவுன் பிளிட்ஸ் அணிக்கு துடுப்பாட்ட ஆலோசகராக ஹஷிம் அம்லா, நியமிக்கப்பட்டுள்ளார்.

எனினும், எம்.எஸ்.எல் ரி20 தொடரில் இம்மாதம் 25ஆம் திகதிக்குப் பின்னரே அம்லாவிற்கு துடுப்பாட்ட ஆலோசகராக செயற்பட முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




No comments

Powered by Blogger.