பேஸ்புக்குக்கு உருவாகும் புதிய லோகோ

பேஸ்புக் நிறுவனம் தனது லோகோவை மாற்றியமைத்துள்ளது. நிறுவனம் துவங்கி 15 ஆண்டுகள் கழித்து பேஸ்புக் தனது லோகோவை மாற்றியுள்ளது. புதிய லோகோ நிறுவனத்திற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய லோகோ நிறுவனம் மற்றும் செயலியை தோற்றத்தின் அடிப்படையில் வித்தியாசப்படுத்தும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய லோகோ பேஸ்புக் வழங்கும் அனைத்து சேவைகளிலும் மாற்றப்படுகிறது. அந்த வகையில் பேஸ்புக் ஆப், மெசஞ்சர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், ஆகுலஸ், வொர்க்பிளேஸ், போர்டல் மற்றும் கலிப்ரா போன்றவற்றுக்கு புதிய லோகோ காப்படுகிறது.

பேஸ்புக் நிறுவன சேவைகளில் பேஸ்புக்கில் இருந்து (from Facebook) என குறிப்பிடும் வழக்கத்தை இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் துவங்கியது. வரும் வாரங்களில் புதிய லோகோவினை தனது சேவைகளில் அறிமுகம் செய்ய பேஸ்புக் திட்டமிட்டுள்ளது. புதிய லோகோ ஒற்றை நிறத்தில் இல்லாமல் பேஸ்புக் வழங்கும் சேவைகளை குறிப்பிடும் வகையில் பல்வேறு நிறங்களில் இருக்கும்.  No comments

Powered by Blogger.