பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் மாற்றம் இல்லை - சஜித்
நான் ஆட்சிக்கு வந்தால் எந்தவொரு சூழ்நிலையிலும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் எவ்வித மாற்றத்தையும் செய்யப் போவதில்லை - இவ்வாறு தெரிவித்துள்ளார் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச.
நீர்கொழும்பில் இடம்பெற்ற பரப்புரைப் பேரணியில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தெரிவித்தாவது,
எந்தவொரு சூழ்நிலையிலும், நான் பயங்கரவாத தடைச்சட்டத்தில் எந்த மாற்றத்தையும் செய்யமாட்டேன்.
யாருடைய பேச்சுக்கும் செவிசாய்த்து, பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தும் சட்டங்களில் மோசமான மாற்றங்களைச் செய்ய மாட்டேன்.
வேட்புமனுவை ஏற்றுக்கொள்ளும் போது, நான் எந்த நிபந்தனைகளுக்கும் இணங்கவில்லை. நான் யாருடைய நிபந்தனைகளுக்கும் இணங்குகின்ற நபர் அல்ல.
சிறிலங்கா செய்து கொண்ட எல்லா அனைத்துலக உடன்பாடுகளும் மீளாய்வு செய்யப்படும்.
தொடர்புபட்ட நாடுகளுடன் கலந்துரையாடிய பின்னர், அவற்றில் மாற்றங்கள் செய்ய முடியும் என்று நம்புகிறேன்-என்றார்.

No comments