காதுக்குள் குடியிருந்த கரப்பான் பூச்சி குடும்பம்

இளைஞர் ஒருவரின் காதுக்குள் பெரும் கரப்பான் பூச்சி ஒன்றும் அதனுடைய 10 குஞ்சுகளும் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஹுய்சோ மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயதுடைய  இளைஞர் ஒருவருக்கே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த இளைஞர் திடீரென்று காது வலியின் காரணமாக தூக்கத்திலிருந்து எழுந்துள்ளார். காதுக்குள் ஏதோ ஊர்ந்து செல்வது போல் இருப்பதாகவும், கடுமையான அரிப்பை உணர்வதாகவும் வீட்டில் இருந்தவர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அவரது வலது புற காதுக்குள் ஒரு பெரிய கரப்பான் பூச்சியும் அதனுடைய 10 குஞ்சுகளும் ஓடிக்கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர்.

இதையடுத்து, நீண்ட நேர சிகிச்சைக்குப் பின்னர் அவரது காதில் இருந்து 11 கரப்பான் பூச்சிகளையும் மருத்துவர்கள் அகற்றினர். 


No comments

Powered by Blogger.