வாக்குச் சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்பு

இனம் காணப்பட்ட வாக்குச் சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்பு அமைக்கப்படும் - இவ்வாறு  மன்னார் உதவித் தேர்தல்கள் ஆணையாளர் ஜே.ஜெனிற்றன் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்ட பொலிஸ் அதிகாரிகள், கட்சி முகவர்கள் மற்றும் ஊடகத்துறையினருக்கான தேர்தல் முன்னோடிக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார் அவர் தெரிவித்ததாவது,

ஜனாதிபதி தெரிவுக்கான முன்னோடி நடவடிக்கைகளை தேர்தல் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது. மன்னார் மாவட்டத்தில் கடந்த ஒன்றரை மாதங்களாக தேர்தல் தொடர்பான செயல்பாடுகளில் சட்டங்கள், எமக்கு கிடைப்பபெறும் முறைப்பாடுகள், எதிர்காலத்தில் தேர்தல் முடிவுவரைக்கும் நாம் எதிர்கொள்ளவிருக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய வேண்டிய நிலை இருக்கின்றது.

தேர்தலை முன்னிட்டு இனிவரும் இரண்டு வாரங்களும் சிக்கல் நிறைந்ததாக காணப்படும். தேர்தல் சட்டங்களை மீறும் நாள்களாகவே இவை இருக்கும் என எதிர்பார்க்கின்றோம்.

கடந்த தேர்தலில் 30 முறைபாடுகள் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. ஆனால் பின் இவ் வழக்குகளை பொலிஸார் வாபஸ் செய்ததையும் காணக்கூடியதாக இருக்கின்றது.

இவ் தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் 76 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  மன்னார் மாவட்ட செயலகத்தில் 8 வாக்குகள் எண்ணும் நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்த வாக்களிப்பு நிலையங்களுக்கும் வாக்குகள் எண்ணும் நிலையங்களுக்கும் தலா இரண்டு பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தினால் போதுமானது என நினைக்கின்றேன்.

கடந்த தேர்தல் காலங்களில் அரசியல் தலைவர்கள் வாக்களிக்கும் நிலையங்களில் முரண்பட்ட சம்பவங்களும் உண்டு.

இவ்வாறு அடையாளமிடப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்களில் விஷேட பொலிஸ் பாதுகாப்பு போடுவது நலம் என நினைக்கின்றேன்-என்றார்.


No comments

Powered by Blogger.