தனியார் காணியில் சடலம் மீட்பு

தனியார் காணியொன்றிலிருந்து வயோதிபப் பெண் ஒருவர் இன்று  காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பிரதான வீதி சுற்றுவட்டத்தின் அருகிலுள்ள தனியார் காணி ஒன்றிலிருந்தே சடலம் மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். 

மண்முனை மேற்கு பிரதேசத்திலுள்ள ஊத்துமடு கிராமத்தைச் சேர்ந்த பூமணி (வயது-80) என்பவரே  இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவரது உயிரிழப்புத் மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸார், மட்டக்களப்பு குற்றவியல் பொலிஸாருடன் இணைந்து  முன்னெடுத்து வருகின்றனர்.


No comments

Powered by Blogger.