டேவிஸ் கோப்பை இடமாற்றம்

இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடையேயான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி இஸ்லாமாபாத்தில் வருகிற 29 மற்றும் 30ந் திகதிளில் நடப்பதாக இருந்தது.

இரு நாடுகள் இடையே ஏற்பட்டுள்ள பதட்டத்தால் பாதுகாப்பு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த போட்டியை பாகிஸ்தானில் இருந்து வேறு இடத்துக்கு மாற்றி பொதுவான இடத்தில் வைக்குமாறு சர்வதேச டென்னிஸ் சம்மேளனத்தை அகில இந்திய டென்னிஸ் சங்கம் கேட்டுக்கொண்டது.

இந்தியாவின் இந்த கோரிக்கையை சர்வதேச டென்னிஸ் சங்கம் ஏற்றுக்கொண்டது. அதன்படி இந்த போட்டி பொதுவான இடத்தில் நடைபெறும். என்று தெரிவித்துள்ளது. 

No comments

Powered by Blogger.