வவுனியாவில் முதன்முறையாக மாவட்ட மாநாடு

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வவுனியா மாவட்ட மாநாடு வவுனியா கலைமகள் விளையாட்டு மைதானத்தில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா முதன்மை அதிதியாக நடைபெற்றது.

காலை ஆரம்பமான நிகழ்வில் கொடி ஏற்றாமல் தொடர்ந்து டக்ளஸ் தேவானந்தா மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் மாலை அணிவிக்கபட்டு அழைத்து வரப்பட்டதுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியிருந்தது.

கட்சியின் வவுனியா மாவட்ட  அமைப்பாளர் திலீபன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ் மாநகரசபையின் முன்னாள் மேஜர் திருமதி யோகேஸ்வரி  பற்குணராசா, சர்வதேச முக்கியஸ்தரான விந்தன், தேசிய அமைப்பாளர் பசுபதி சிவரத்தினம், கட்சியின் வவுனியா உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள், மற்றும் கட்சி உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

ஈழமக்கள் ஜனநாயாக கட்சியின் குறித்த மாநாடு வவுனியாவில் முதன்முறையாக இடம்பெற்றுள்ளதுடன் அதிகளவான பொதுமக்கள் மற்றும் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். 

No comments

Powered by Blogger.