மனைவியை குத்திக் கொலை செய்த கணவன்

பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனின் அதீத ரசிகையான மனைவியை, கணவன் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

இந்தச் சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

மனைவியைக் கொலை செய்த கணவன், தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். 

அமெரிக்காவில் தினேஷ்வர் புத்திதட் என்பவருக்கும், டோன்னி டோஜோய் என்ற பெண்ணுக்கும், கடந்த ஜூலை மாதம் திருமணம் நடந்துள்ளது.

பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனின் தீவிர ரசிகையான டோன்னி, அவர் மீது அதீத பிரியம் கொண்டிருந்தது அவரது கணவருக்குப் பிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மனைவி டோன்னியை கத்தியால் குத்தி கொலை செய்த தினேஷ்வர் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

ஹிருத்திக் ரோஷனின் பாடல் ஒலித்தால் கூட தொலைக்காட்சியை அனைத்து விடும் அளவுக்கு தினேஷ்வர் பொறாமை கொண்டிருந்ததாக அவர்களது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.


No comments

Powered by Blogger.