பிள்ளைப் பாக்கியம் இல்லையா ; இதோ மகிந்தவின் செய்தி

பிள்ளைப் பாக்கியமற்றவர்களுக்காக அரச மருத்துவமனைகளில் நவீன தொழில்நுட்ப வசதிகள் ஏற்படுத்தப்படும் - இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிலாபத்தில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது,

பிள்ளைப் பாக்கியமின்றி அவதியுறும் குடும்பங்களின் நலனைக் கருத்தில் கொண்டு  அதி நவீன முறைகளில் சிகிச்சை அளிக்கும் நோக்கில் விசேட மருத்துவ வசதிகள் அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.

பணம் படைத்தவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று நவீன மருத்துவ சிகிச்சை முறைமைகளின் மூலம் பிள்ளை பேறு பெற்றுக் கொள்கின்றனர். 

எனினும் வறுமையில் வாடுவோர் பிள்ளை பாக்கியமின்றி பெரும் துயரங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

சிகிச்சை பெற்றுக்கொள்வதன் மூலம் பிள்ளைப் பாக்கியத்தை பெற்றுக் கொள்வதற்கு முடியும் என்ற போதிலும் வறுமை நிலைமையினால் அந்தக் கனவை நனவாக்கிக் கொள்ள முடியாதவர்களுக்கு அரசாங்கம் என்ற ரீதியில் ஒத்துழைப்பு வழங்கத் தயார்.

புதிய அரசு பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் அரச மருத்துவமனையில் மகப்பேறு தொடர்பில் அதி நவீன தொழில்நுட்ப வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்-என்றார்.


No comments

Powered by Blogger.