அரச தொழில்வாய்ப்பு வழங்குவேன் – கோத்தா

வறுமையிலுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் அரச தொழில்வாய்ப்பு வழங்குவேன். என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவை – மன்னம்பிட்டிய மைதானத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் , 

‘குறைந்த வருமானம் பெறுவோர், சமுர்த்தி பெறுபவர்கள், சமுர்த்தி கிடைக்காதவர்கள், வருமானம் அற்றவர்கள், நாளாந்தம் உழைக்கும் தொழிலாளர்கள், அங்கவீனர்கள் மற்றும் நோயாளர்களுக்காக மாதந்தோறும் நிவாரணப் பொதியை இலவசமாக வழங்குவதற்கு நாம் தீர்மானித்துள்ளோம்.

அரச நிறுவனங்களில், பாடசாலைகளில், உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களில் தற்போது சுமார் ஒரு இலட்சம் நிபுணத்துவம் அவசியமற்ற தொழில் வாய்ப்புக்கள் உள்ளன.

அவற்றை கஷ்டப்படும் குடும்பங்களுக்கு தலா ஒரு தொழில்வாய்ப்பு வீதம் அரச தொழில் வாய்ப்பைப் பெற்றுக்கொடுப்பதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.No comments

Powered by Blogger.