சர்வதேச நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் முதல் பெண்

தமிழ் சினிமாவை கடந்து டீவி சீரியல்களின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ள நடிகை ராதிகா சரத்குமார் முதன் முறையாக டீவி தொகுப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார்.

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கும் ‘கோடீஸ்வரி’ என்ற வினாடிவினா கேம் ஷோவை நடிகை ராதிகா சரத்குமார் தொகுத்து வழங்குகிறார். 

பெண்கள் மட்டுமே பங்கேற்கவுள்ள இந்த பிரத்யேக நிகழ்ச்சியில் அவர்களின் அறிவுக்கூர்மை, விழிப்புணர்வு ஆகியவற்றை உலகிற்கு அடையாளம் காட்டும் விதமாக உருவாகிறது.

ரூ.1 கோடி பரிசுத்தொகை கொண்ட இந்நிகழ்ச்சி வரும் டிசம்பர் மாதம் முதல் ஒளிபரப்பாகவுள்ளதாக கூறப்படுகிறது.


No comments

Powered by Blogger.