ஜூட் அந்தோனிக்கு மன்னிப்பு வழங்கிய ஜனாதிபதி

கொழும்பு ராஜகிரிய றோயல் பார்க் வீடமைப்பு தொகுதியில் யுவான்னே ஜோன்சன் என்ற 19 வயதான யுவதியை கொலை செய்த சம்பவத்தின் குற்றவாளியான ஜூட் அந்தோனி ஜயமஹா என்பவருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியுள்ளார்.

இந் நிலையில் அவரை விடுதலை செய்தவற்கான ஆவணங்களிலும் கையெழுத்திட்டு சிறைச்சாலை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த கொலை சம்பந்தமான வழக்கில் ஜூட் அந்தோனி ஜயமஹாவுக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருந்தது.

ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடைதற்கு இன்னும் 7 நாட்கள் உள்ள நிலையில் ஜூட் அந்தோணி ஜயமஹாவுக்கு பொது மன்னிப்பு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.