பீடி இலைகள் மீட்பு

மட்டக்களப்பு காரைதீவு கடலில் ஒருதொகை பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

52 கொள்கலன்கள் அடைக்கப்பட்ட நிலையில்,  3 ஆயிரத்து 18 கிலோகிராம் பீடி இலைகள் மீட்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இதேவேளை, தலமன்னர் கலங்கரை விளக்கத்திற்கு வெளிப் பகுதி கடலில்,  21 பொட்டலங்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 904 கிலோகிராம் பீடி இலைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த ஆண்டில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளில்,  48 ஆயிரம் கிலோகிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டதாகக் கடற்படை தெரிவித்துள்ளது.


No comments

Powered by Blogger.