பொய்யான தொழிலால் ஏமாந்த மணமகள் குடும்பம்

சிங்கப்பூரில் சிவில் இஞ்சினியராக இருப்பதாக கல்யாணத் தரகர் கூறியதை  நம்பி கட்டட தொழிலாளியை பெருமளவு சீதனத்துடன் தமது பட்டதாரி பெண்ணுக்கு கலியாணம் கட்டிக் கொடுத்துள்ள பெற்றோர்கள்.

இச் சம்பவம் யாழ் திருநெல்வேலிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

யாழில்  பாடசாலை ஒன்றில் 15 வயது வரைமட்டுமே கல்வியை தொடர்ந்த மணமகன்,  கொழும்பில் தனது பெற்றோரை இழந்த நிலையில்,  தனது சகோதரிகள் இருவருடன் சித்தி வீட்டில் வசித்து வந்துள்ளார்.

2010ம் ஆண்டளவில் சிங்கப்பூர் சென்று ,அங்கு  மேசன் வேலை செய்து கொண்டிருந்த போதும்  தனது சித்தியிடம் தான் அங்கு படித்து கட்டட மேற்பார்வையாளராக இருப்பதாக கூறியுள்ளார்.  இதனையடுத்து  சித்தி  தரகரிடம் மூலம் அவருக்கு பெண் பார்க்கும் படலத்தை தொடங்கியுள்ளார். தரகர் மணமகள் வீட்டில் கொஞ்சம் உயர்வாக சிவில் இஞ்சினியர் மாதம் 5 லட்சத்திற்கு மேல்  உழைப்பதாகவும் கூறியுள்ளார்.


இந் நிலையில் கடந்த ஆவணி மாதம் யாழ் பல்கலைக்கழகத்தில் கலைப் பிரிவில் பட்டம் பெற்றிருந்த மணமகளுடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

இதன் பின்னர் மணப்பெண்ணின் ஒன்று விட்ட பொறியியலாளராகவுள்ள சகோதரன்  ஒருவர் , மாப்பிளையை விருந்துக்கு அழைத்து அவருடன் வேலை தொடர்பாக கதைக்க முற்பட்ட போதே, மாப்பிளை   சமாளிக்க முற்பட்டுள்ளார்.

சந்தேகமடைந்த அந்தப் பொறியிலாளர் ,சிங்கப்பூரில் உள்ள தனது நண்பர்கள் சிலரிம் விசாரித்த போது உண்மை வெளியாகியுள்ள நிலையில் , பெண் வீட்டார் தற்போது கடும் அதிர்ச்சியில் இருப்பதாகவும் , மணப்பெண் தற்போது கர்ப்பமாக உள்ளதால் இது தொடர்பாக அவர்கள் நடவடிக்கை எடுக்க தயங்கி வருவதாகவும் தெரியவருகின்றது.

மாப்பிளைக்கு சீதனமாக 75 லட்சம் பணம் மற்றும் யாழ் திருநெல்வேலிப்பகுதியில் வீடு வளவும் கொடுக்கப்பட்டுள்ளது.No comments

Powered by Blogger.