யாழில் தேர்தல் பரப்புரையில் நாமல் ராஜபக்ச

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு ஆதரவு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்றையதினம்  யாழ் நகரில் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். 

தேர்தல் பரப்புரை நடவடிக்கைகளுக்காக வடக்கிற்கு வந்துள்ள  நாமல் ராஜபக்ச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் யாழில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர்.

இதேவேளை, யாழ்ப்பாணம் உட்பட வடக்கில் தாம் முன்னெடுத்து வரும் பரப்புரை நடவடிக்கைகள், ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் தெரிவித்து எடுத்து வரும் நிலைப்பாடுகள், தமிழரசுக் கட்சி சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பதென எடுத்துள்ள முடிவு, ஐந்து தமிழ்க் கட்சிகளின் நடவடிக்கைகள் தொடர்பிலும் நாமல் ராஜபக்ச ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.