பொய் பிரச்சாரம் - சிவமோகன்

அரசியல் கைதிகள் 130 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில் அவர்கள் தொடர்பில் கரிசினை கொள்ளவில்லை. என்பது பொய் பிரசாரம். என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில்  அவரது அலுவலகத்தில் நேற்று  ஊடகவியலாளரின் கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும்  போதே அவர் இதனை தெரிவித்தார்.

 அவர் மேலும் தெரிவிக்கையில், 

இந்த தேர்தலில் தமிழர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும்.  தமிழர்கள் தங்களது வாக்குகள் வீணாகாதவகையில் ஜனநாயக கடமையை சரியாக செய்ய வேண்டும். மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். 

எனவே எவரை வெல்ல வைத்தால் நீங்கள் நிம்மதியாக வாழலாம் என்பதனை நினையுங்கள்.  தமிழர்கள் தவறான முடிவை எடுப்பார்களானால் அவர்கள் தாங்களாகவே அராஜக முறைக்குள் போய் விழுந்தவர்களாவார்கள்.

காணிகள் விடுவிக்கப்படவில்லை என்பது பொய்யான கருத்து. காணிகள் பெருந்தொகையாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முயற்சியால் விடுவிக்கப்பட்டன.  இன்னும் சில காணிகள் விடுவிக்கப்பட இருக்கின்றது.

அரசியல் கைதிகளாக அடைக்கப்பட்ட இருநூறுக்கும் மேற்பட்டவர்களில் தற்போது இருப்பது 80 பேர் மாத்திரமே. 130 அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

தமிழ் தேசியக்கூட்டமைப்பு அரசியல் கைதிகளை பார்க்கவில்லை என்பது எமக்கு எதிரான பொய் பிரசாரம் என மேலும் தெரிவித்தார்.No comments

Powered by Blogger.