சந்திரிக்காவின் மாநாட்டில் பலர் பணிநீக்கம்

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள் பலர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தலைமையில் நேற்று இடம்பெற்ற மாநாட்டில் கலந்துகொண்ட சுதந்திர கட்சியின் அமைப்பாளர்களே இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக  கட்சியின் பொதுச் செயலர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் பலர் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

எனினும், இதற்கு சிறிலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட ஆலோசகரான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க உள்ளிட்ட அமைப்பாளர்கள் பலர் அதிருப்பதி வெளியிட்டிருந்தனர்.

இந்த நிலையில்இ சந்திரிக்கா தலைமையில் “நாங்கள் இலங்கை” என்ற அமைப்பினால் விசேட மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டு, சுகததாஸ உள்ளக அரங்கில்  இடம்பெற்றது.

இதில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த அமைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இந் நிலையிலேயே, குறித்த மாநாட்டில் கலந்துகொண்ட அமைப்பாளர்கள் பலர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அந்த கட்சியின் பொது செயலார் தெரிவித்துள்ளார்.No comments

Powered by Blogger.