மூவருக்கு மட்டும் தனியான வாக்கெடுப்பு நிலையம்

வாக்காளா்கள் மூவருக்காக  தனியான வாக்கெடுப்பு நிலையம் ஒன்றை அமைக்க தோ்தல்கள் ஆணைக்குழு தீா்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மட்டக்களப்பு- மாந்தீவு பகுதியில் உள்ள தொழுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மூவருக்காகவே குறித்த வாக்களிப்பு நிலையம் அமைக்கப்படவுள்ளது.

அவர்களுக்கான வாக்குச்சீட்டுக்கள் வரும் 15 ஆம் திகதி மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் வழங்கல் பிரிவிலிருந்து எடுத்து சென்று வவூணதீவு வாக்கெடுப்பு நிலையத்திலிருந்து மறுநாள் மாந்தீவுக்கு கொண்டுசெல்லப்படவுள்ளன.

மாந்தீவுக்கு இயந்திரப்படகு மூலமாக வாக்கு சீட்டுக்கள் எடுத்து செல்லப்பட்டு தேர்தல் நாள் காலையிலிருந்து மாலை 5மணி வரையும் வாக்கெடுப்பு நடத்தப்படும் என தெரிவத்தாட்சி அலுவலர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

குறித்த மாவட்டத்தில் மிகவும் வாக்காளர் குறைந்த வாக்கெடுப்பு நிலையமாக இந்த வாக்களிப்பு நிலையம் காணப்படுகின்றது.


No comments

Powered by Blogger.