அகதிகள் முகாமில் பட்டினியால் இருவர் உயிரிழப்பு

அகதிகள் முகாமில் பட்டினியால் இரண்டு வயது குழந்தை மற்றும் வயோதிபப் பெண்ணொருவரும் உயிரிழந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

திரிபுராவின் கஞ்சன்பூர் மாவட்டத்தில் புரூ அகதிகள் முகாம் உள்ளது. இம் முகாமுக்கு கடந்த மாதம் முதல் நிவாரணப் பொருள்களை மத்திய அரசு நிறுத்திவிட, இதனால் அங்குள்ள மக்கள் உணவு கிடைக்காமல் திண்டாடி வருவதாகக் கூறப்படுகிறது.

அங்கு வசித்து வந்த ஒரு 2 வயது குழந்தை மற்றும் 60 வயது பெண் என இருவர் நேற்று முன்தினம் உயிரிழந்தனர். அவர்கள் பட்டினியால் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

பட்டினி காரணமாக குழந்தைகள் உள்பட 40-க்கும் மேற்பட்டோர் நோயில் வாடி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இச் சம்பவங்களால் முகாமில் தங்கியிருக்கும் அகதிகள் அனைவரும் அரசுக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். 

ஆனந்தபசாரில் உள்ள உணவு குடோனை கொள்ளையிடப் போவதாகவும் அவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

முகாமுக்கு மீண்டும் நிவாரண விநியோகம் செய்ய வேண்டும் என புரூ அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


No comments

Powered by Blogger.