புதுச்சேரி அருகே கார் வெடித்து விபத்து

புதுச்சேரியில் கார் திடீரென வெடித்து விபத்து ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்தார்.

புதுச்சேரி உழந்தைகீரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமரன் (32). கார் ஓட்டுநரான இவர், இன்று (நவ.5) காரை எடுத்தபோது திடீரென்று புகை வந்தது. அப்போது பயங்கர சத்தத்துடன் வெடித்ததால், முத்துக்குமரன் உடலில் தீப்பிடித்தது. இதனால் முத்துக்குமரன் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார்.

உடனே அக்கம்பக்கத்தினர் மற்றும் முதலியார்பேட்டை போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து காரை உடைத்து முத்துக்குமாரின் உடலை மீட்டனர்.

இதுகுறித்து முதலியார்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நின்றிருந்த காரில் ஏசியை ஆன் செய்து விட்டுச் சென்று, பின் காருக்குள் சில நிமிடத்திற்குப் பிறகு அமர்ந்தபோது திடீரென கார் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், இறந்த முத்துக்குமரனுக்கு அடுத்த மாதம் திருமணம் நடக்கவிருந்தது என்றும் தெரியவந்துள்ளது.No comments

Powered by Blogger.