சொந்தக்காரராகும் விஜய்-அதர்வா

நடிகர் முரளியின் மகன்  ஆகாசுக்கும்  விஜய் 64 படத்தைத் தயாரித்து வரும் சேவியர் பிரிட்டோ மகள் சினேகா என்பவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாம்.

மறைந்த நடிகர் முரளிக்கு காவ்யா என்ற மகளும் அதர்வா, ஆகாஷ் என்ற மகன்களும் இருக்கிறார்கள். 

ஆகாஷ் - சினேகா இருவரும் ஒன்றாகப் படித்துள்ளார்கள். அப்போதே இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. சினேகா, கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஆகாஷ் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. 

தற்போது இருவரது வீட்டாரும் சம்மதித்துவிட்டதால் விரைவில் திருமண நிச்சயதார்தத்தை நடத்த உள்ளார்களாம்.

சேவியர் பிரிட்டோ, விஜய்க்கு நெருங்கிய உறவினர் என்பதால் ஆகாஷ், சினேகா திருமணத்தின் மூலம் அதர்வாவும் விஜய்க்கு உறவினராகப் போகிறார்.


No comments

Powered by Blogger.