வெலிக்கடை நினைவேந்தல் நிகழ்வு

கடந்த 2012ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலைக்குள் நடந்த படுகொலையில் உயிரிழந்தவர்கள் நினைவுகூரப்பட்டனர்.

வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்பாக குறித்த நினைவுகூரல் நிகழ்வு இடம்பெற்றது.

வெலிக்கடை சிறைச்சாலையின் எதிர்ப்புறமாக, உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி  அஞ்சலி செலுத்தினர்.

கொல்லப்பட்டவர்களிற்கு நீதி வழங்கப்பட வேண்டும் என உயிரிழந்தவர்களின் உறவினர்கள் இதன்போது வலியுறுத்தினர்.

கடந்த 2012ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம்  திகதி வெலிக்கடை சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட குழப்பத்தையடுத்து, சிறைச்சாலைக்குள் நுழைந்த இராணுவத்தினரால் 27 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் 40 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.No comments

Powered by Blogger.