மன்னார் ஆயரைச் சந்தித்த மகிந்த
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் மன்னார் மாவட்ட பேராயர் இமானுவேல் பெர்ணான்டோவுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
மன்னாரில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துக்கொண்டதன் பின்னர் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி தேர்தலின் தற்போதைய நிலைமைகள் மற்றும் நாட்டின் சமகால பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில் மன்னார் மாவட்ட உயர்மட்ட அருட் தந்தையர்கள், பொதுஜன முன்னணியின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

No comments