கடற்கரைககளில் எண்ணெய் திட்டுக்கள்

சுற்றுலா பயணிகள் அதிகம் செல்லக்கூடிய டபஸ்கோவில் உள்ள நான்கு கடற்கரைகளில் 8 கிலோ மீட்டர் தொலைவிற்கு எண்ணெய் திட்டுக்கள் காணப்படுகின்றன.

அங்கு செல்லும் பொது மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு தோல் நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக குறித்த கடற்கரைகளுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை விதித்து மூடப்பட்டுள்ள கடற்கரையை சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் மெக்ஸிக்கோவில் கடற்கரைகளுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எண்ணெய் திட்டுக்கள் எப்படி வந்தன?  என்பது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.


No comments

Powered by Blogger.