ஹெரோயின் வைத்திருந்த நபர் கைது

மாளிகாவத்த பகுதியில் ஒரு தொகை ஹெரோயின் போதை பொருளை தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சுற்றிவளைப்பின் போது 107 கிராம் 850 மில்லி கிராம் பெறுமதியான ஹெரோயின் போதை பொருள் கைப்பற்றப்பட்டதாக திட்டமிடப்பட்ட குற்றங்களை தடுக்கும் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு 10 பகுதியில் வசிக்கும் 40 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை நேற்று முற்பகல் 11.30 அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சந்தேகநபரை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலை படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திட்டமிடப்பட்ட குற்றங்களை தடுக்கும் பிரிவு முன்னெடுத்துள்ளது.No comments

Powered by Blogger.