மக்கள் சார்பில் கடமைகளை நிறைவேற்றுவேன் - கோத்தபாய

பாதுகாப்பான நாடு அபிமானமிக்க தேசத்திற்காக மக்கள் சார்பில் தனது கடமைகளை நிறைவேற்றுவேன். என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நேற்று வத்தளையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனை தெரிவித்திருந்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

தங்களது அரசாங்கம் அமைக்கபட்டதன் பின்னர் அடிப்படை வாதத்திற்கும், தீவிரவாதத்திற்கு  இடமளிகப்படமாட்டது.  தேசிய பாதுகாப்பையும், மக்களின் பாதுகாப்பையும் உறுதிபடுத்தாமல் நாட்டை முன்நோக்கி கொண்டு செல்ல முடியாது. 

இந்த நிலையில் மக்கள் தங்களது பொறுப்பை நிறைவேற்ற வேண்டும். என்றும், தான் தன்னுடைய கடமையை நிறைவேற்றுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


No comments

Powered by Blogger.