சு.கட்சியை காப்பாற்ற ஐ.தே. கட்சியால் முடியாது

ஶ்ரீ.சு.கட்சியை காப்பாற்ற ஐக்கிய தேசிய கட்சியால் முடியாது என ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பதில் தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷமன் பியதாக தெரிவித்துள்ளார்.

மாத்தறை, ஹக்மன பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

ஶ்ரீ.சு.கட்சி தொடர்பில் முன்னாள் தலைவர்கள் சிலர் பல்வேறு விடயங்களை கூற தொடங்கியுள்ளனர்.

எமது வெற்றிப் பயணத்தை தடுக்கும் நடவடிக்கையாகவே இதனை நாங்கள் பார்க்கிறோம்.

யார் என்ன கூறினாலும், ஶ்ரீ.சு.கட்சியை பிரிக்க எவராலும் முடியாது. கட்சியை பிளவு படுத்த ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்தாலும் அது நடக்காது.


No comments

Powered by Blogger.