A/L சித்தியடையும் அனைவருக்கும் பல்கலைகழகம்- கோத்தபாய

உயர் தரத்தில் சித்தியடையும் அனைத்து மாணவர்களுக்கும் பல்கலைகழக வரத்தை வழங்குவதாக ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கலென்பிதுனுவெவ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கல்விக்காக தான் பாரிய அளவில் முதலீடு செய்வதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

உலகில் அதிகளவான நாடுகள் தொழிநுட்பத்தின் ஊடாக முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் அது எங்களுக்கு சிறந்த உதாரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


No comments

Powered by Blogger.