மின்னல் தாக்கி அறுவர் உயிரிழந்துள்ளனர்

உகண்டா நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள படேர் நகரில் மின்னல் தாக்கியதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 11 பேர் பலத்த காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்னல் தாக்கம் இடம்பெற்ற வேளை ஒரு மக்கள் கூட்டம் மரம் ஒன்றின் கீழ் இருந்துள்ளார்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த பகுதியில் மின்னல் பொதுவாக இடம்பெறும் என  கூறப்படுகிறது.

உகண்டா நாட்டின் வானிலைத் துறை கடந்த மாதம் தொடங்கிய மழைக்காலம் அதிகரித்த இருப்பதாக கூறியுள்ளதோடு,  சில பகுதிகள் வெள்ளம், மின்னல் மற்றும் மண் சரிவுகளை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது என்று எச்சரித்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.