43,823 மணி நேரங்கள் ஆகிறதுஅட்லி ட்வீட்

'ராஜா ராணி' திரைப்படம் மூலம் இயக்குநர் அட்லி தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தளபதி விஜய்யுடன் இணைந்து 'தெறி', 'மெர்சல்' , 'பிகில்' என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்தார்.

இதனையடுத்து அட்லி , பாலிவுட் ஷாருக்கானின் நடிப்பில் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார்.  

கடந்த 2014 ஆண்டு நடிகை பிரியாவை திருமணம் செய்துகொண்ட இந்நிலையில் நேற்றைய தினம் அவர்கள் திருமண தினம் என்பதால் அட்லி தனது மனைவி குறித்து ட்விட்டர் பதிவை எழுதியுள்ளார்.

அதில், திருமண நாள் வாழ்த்துகள். நாம் இணைந்து தற்போது 43,823 மணி நேரங்கள் ஆகிறது. நீண்ட நாட்களை உன்னுடன் இணைந்து கழிக்க வேண்டும். லவ்யூ பாப்பா என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.