3,500 மெட்ரிக் தொன் எரிவாயு பவுசர்கள் இறக்குமதி


நாட்டில் தற்போது நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்தவற்காக அடுத்த இரண்டு நாட்களுக்குள் 3,500 மெட்ரிக் தொன் எரிவாயு பவுசர்களை கொழும்பு துறைமுகத்திற்கு இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முதலில், விலை குறைவு ஒன்றை எதிர்பார்த்து,செப்டம்பர் மாதத்தில் எரிவாயு கேள்வியில் வீழ்ச்சி காணப்பட்டது. மேலும் ,செப்டம்பர் மாத மையப் பகுதியில் இடம்பெற்ற சவூதி அரேபியாவின் அரெம்கோ ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து, கிழக்கு சவூதி அரேபியாவின் பகுதிகளைச் சேர்ந்த எரிவாயு விநியோகத்தில் உலகளாவிய ரீதியில் இலங்கை உட்பட தாமதம் ஏற்பட்டது. 

அதனை தொடர்ந்து, எரிவாயு சிலின்டரின் விலைக்குறைப்பு காரணமாக புதிதாக சந்தையில் பிரவேசித்த நுகர்வோரின் எண்ணிக்கையும் காரணமாக அமைந்தது. நாட்டின் எரிவாயு துறைக்கு தற்போதைய தட்டுப்பாட்டு நிலை வெவ்வேறு நிலைகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இறுதியாக,தற்போது நாட்டில் தொடர்ந்து நிலவும் மோசமான காலநிலை காரணமாக, கப்பல்கள் எரிவாயு விநியோக இறங்கு துறைகளை நெருங்குவதில் காணப்படும் சிக்கல் நிலையும், இந்த நிலைமையை மேலும் பாதித்துள்ளது. கப்பல்கள் காத்திருக்கும் நிலையில், அவற்றை இறங்கு துறையில் இறக்குவதில் சிக்கல் நிலைகளும் காணப்படுகின்றன.


No comments

Powered by Blogger.