பேருந்தை மோதியது டிப்பர் ; பலர் படுகாயம்

கொழும்பு வெல்லவாய - தனமல்வில பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 30 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து சம்பவம் நேற்று இடம்பெற்றதாகப்  பொலிஸார் தெரிவித்தனர்.

மாத்தறையிலிருந்து மொனராகலை நோக்கி பயணித்த தனியார் பேருந்தும்  எதிர்திசையில் பயணித்த டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் 13 பெண்களும் 17 ஆண்களும் உள்ளடங்கலாக படுகாயமடைந்த 30 பேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

அவர்களில் ஏழுபேர் மேலதிக சிகிச்சைகளுக்காக எம்பிலிப்பிட்டிய  மருத்துவமனைக்கு  மாற்றப்பட்டுள்ளனர். 

நான்கு  பெண்களும்  மூன்று ஆண்களுமே இவ்வாறு மேலதிக சிகிச்சைகளுக்காக மாற்றப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


No comments

Powered by Blogger.