போதைப்பொருள் பயன்படுத்திய 22 பேர் கைது

பெந்தோட்டை கஹாகொல்ல பகுதியில் பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற போர்வையில் போதை பொருள் மற்றும் போதை பொருள் வில்லைகளை பயன்படுத்திய இடம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

இதன்போது ஹெரோயின், கஞ்சா, மற்றும் போதை பொருள் வில்லைகளை பயன்படுத்திய குற்றத்திற்காக சுமார் 22 சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

19 முதல் 48 வயதான ஆண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் பெந்தோட்டை, கொஸ்கொட, அஹூங்கல்ல, பேருவளை, ஹெட்டன், தெஹியத்தகண்டிய ஆகிய இடங்களை சேர்ந்தவர்களாவர்.

கடந்த 10 ஆம் திகதி கைது செய்யப்பட்ட இவர்கள் பலப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் ஹெரோயின் போதை பொருளை தம்வசம் வைத்திருந்த ஒருவரை பூசா புனர்வாழ்வு மத்திய நிலையத்திற்கு அனுப்பி மூன்று மாத காலத்திற்கு புனர்வாழ்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் கஞ்சா போதை பொருளை தம்வசம் வைத்திருந்த ஆறு சந்தேக நபர்களுக்கு எதிராக தண்டபணம் அறவிடப்பட்டுள்ளது.

அத்துடன் போதை பொருட்களை சட்டவிரோதமாக தம்வசம் வைத்திருந்த குற்றத்திற்காக கைதுசெய்யப்பட்ட 13 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்த பிரதான சந்தேகநபர் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பெந்தோட்டை பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
No comments

Powered by Blogger.