வண்டி மோதி 2 பெண்கள் பலி, 4 சிறுவர்கள் காயம்

காலி, இமதுவ பகுதியில் நேற்றிரவு லொறியுடன் முச்சக்கர வண்டி ஒன்று மோதி இடம் பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் , இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த நான்கு சிறுவர்கள் உட்பட ஐந்து பேர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.


No comments

Powered by Blogger.